தற்போதைய நிலைமைகள் குறித்து ஐ.நா ஆணையாளருக்கு கடிதம் அனுப்ப நடவடிக்கை!

Mayoorikka
2 years ago
தற்போதைய நிலைமைகள் குறித்து ஐ.நா ஆணையாளருக்கு கடிதம் அனுப்ப நடவடிக்கை!

இலங்கையின் தற்போதைய நிலைமைகளை ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு தெளிவுபடுத்தும் முகமாக அறிக்கையொன்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் தயார் செய்யப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழரசுக்கட்சியின் மத்தயிகுழு கூட்டம் வவுனியாவில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது.

அதன் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் காணிகள் சுவிகரிக்கப்படும் பிரச்சனை தற்போது பூதாகாரமாக மாறியுள்ளது.

இது தொடர்பாக சில பொதுஅமைப்புக்கள் ஏனைய கட்சிகளுடன் இணைந்து பொது வேலைத்திட்டத்தினை உடனடியாக அமுல்ப்படுத்தவேண்டும் என கலந்துரையாடடியுள்ளதாக குறிப்பிட்டார்.

இந்நிலையில் அனைவரும் ஒன்றிணைந்து எமது நிலங்கள் அபகரிக்கப்படுவதை தடுப்பது எமது பிரதான கடமையாக கருதுகின்றோம். எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறும் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் எழுத்துமூலான அறிக்கையை உயர்ஸ்தானிகர் அலுவலகம் வெளியிடும்.

மார்ச் 3 ஆம் திகதி இலங்கை தொடர்பாக ஒரு ஆய்வு இடம்பெறும். அதற்கு உதவியாக இன்றைய சூழலை அவர்கள் அறியும் முகமாக தமிழரசுக்கட்சி தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடனும் ஏனைய பங்காளி கட்சிகளுடனும் இணைந்து ஆவணமொன்றை தயார் செய்கின்றோம் என அவர்
குறிப்பிட்டார்.

ஏற்கனவே தயார் செய்யப்பட்ட ஆவணமும் இரா. சம்பந்தனிடம் உள்ளது. அது நாளை மறுநாள் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கு பகிரப்படும்.

மிக விரைவில் அதற்கு இணக்கம் காணப்பட்டு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கடிதமாக இரா. சம்பந்தனின் ஒப்பத்தோடு அனுப்பி வைக்கப்படும் என சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.