மெக்சிகோவில் பயங்கரம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சுட்டுக்கொலை!

#world_news
Nila
4 years ago
 மெக்சிகோவில் பயங்கரம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சுட்டுக்கொலை!

மெக்சிகோ நாட்டின் குவானாஜுவாடோ மாநிலத்தில் உள்ள சிலாவ் கிராமப்புற நகராட்சி பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் உயிரிழந்துள்ளனர். இவர்களில் நான்கு பேர் ஆண்கள், இரண்டு பேர் பெண்கள் என செய்திகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். 

இந்த கொடூர செயலை செய்வர்கள் குறித்த ஆதாரங்கள்  அந்த பகுதியில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. 

கடந்த நான்கு மாதங்களில் சிலாவ் கிராமப்புற நகராட்சியில் நடத்தப்பட்ட ஐந்தாவது தாக்குதல் இது என்று அப்பகுதி அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

மெக்சிகோவின் மத்திய மாநிலமான குவானாஜுவாடோவில் இரண்டு போதைப்பொருள் கடத்தல் குழுக்கள் இடையே ஏற்பட்ட தகராறு வன்முறையாக மாறி உள்ளது. 

இந்த குழுக்களை சேர்ந்தவர்கள் இந்த குற்றத்தில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4