5 வயது சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி - பிரித்தானியா அறிவிப்பு
#Covid Vaccine
#Covid 19
#Covid Variant
#Omicron
#UnitedKingdom
Nila
2 years ago
பிரிட்டனில் 5 வயது சிறார்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரிட்டன் சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பிரிட்டனில் வேகமாக பரவும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த தடுப்பூசி செலுத்திகொள்ள தகுதி படைத்தோரின் பட்டியலில், கொரோனா அதிகம் பாதிக்கும் அபாயம் நிறைந்த 5 முதல் 11 வயது சிறார்களும் சோ்க்கப்பட்டுள்ளனா்.
சா்க்கரை நோய், நோய் எதிா்ப்பாற்றல் குறைபாடு, கற்றல் குறைபாடு போன்ற உடல்நலக் குறைபாடுகளை கொண்ட சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.
இந்த அறிவிப்பின் மூலம், சுமாா் 5 லட்சம் சிறார்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் தகுதியை பெறுகின்றனா் என பிரிட்டன் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.