எங்கு சென்றாலும் கையோடு கழிவறையைக் கொண்டு செல்லும் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்

Keerthi
4 years ago
எங்கு சென்றாலும் கையோடு கழிவறையைக் கொண்டு செல்லும் வட கொரிய  ஜனாதிபதி கிம் ஜொங் உன்

வட கொரிய  ஜனாதிபதி கிம் ஜொங் உன் ( Kim Jong-un) எந்த வெளிநாட்டுக்குச் சென்றாலும் கையோடு கழிவறையை எடுத்துச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி அணு ஆயுத சோதனை நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் வட கொரிய ஜனாதிபதி கிம்  எந்த வெளிநாட்டுக்கு சென்றாலும், தனக்கானபிரத்யேகமாக உருவாக்கப்பட்ட கழிவறையை  எடுத்துச் செல்வதாகத்  தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து வடகொரியா கமாண்டோ பிரிவின் முன்னாள் ஊழியர் ஒருவர் பிரபல ஊடகமொன்றிக்கு  வழங்கிய செவ்வியில் , ” பொதுக்கழிவறைகளை பயன்படுத்துவதை சில காலமாகவே நிறுத்திவிட்டார். அவர் தனக்கானபிரத்யேகமாக உருவாக்கப்பட்ட கழிவறையை மாத்திரமே   பயன்படுத்துகிறார். தன்னுடைய மலத்திலிருந்து தனது உடல்நலம் பற்றிய விஷயங்கள் வேறு யாருக்கும் சென்றுவிடக்கூடாது என்பதற்காகவே அவ்வாறு அவர் செய்கிறார். தனது மலம், தவறானவர்களின் கைகளுக்கு சென்றுவிட்டால், அதனால் பிரச்னைகள் ஏற்படக்கூடும்’ என கிம் ஜோங் உன் கருதுவதாக அவர் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4