அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் 01.02.2022

Keerthi
2 years ago
அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் 01.02.2022

மேஷம்: 
அசுவினி: பணியிடத்தில் உங்களின் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைக்கும்.
பரணி: நல்ல விஷயம் ஒன்றை துணிந்து செய்து வெற்றி காண்பீர்கள்.
கார்த்திகை 1: சுபச்செலவுகள் வரும். பழைய முதலீடு லாபம் அளிக்கும்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: சற்றும் எதிர்பாராத நன்மை ஒன்று வருவதால் மகிழ்வீர்கள்..
ரோகிணி: குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் நிம்மதி ஏற்படும்.
மிருகசீரிடம் 1,2: பேச்சில் கவனமும் செயல்களில் நிதானமும் வேண்டும்.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: புதிய முடிவு எடுக்கும்போது இரு முறை யோசிக்கவும்.
திருவாதிரை: யாரையும் வீணாகப் பகைத்துக் கொள்ளாதிருப்பது நல்லது.
புனர்பூசம் 1,2,3: தொழில், பணியில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும்.

கடகம்: 
புனர்பூசம் 4: பெரியவர்களுக்கு உதவி செய்து அவர்களின் ஆசியை பெறுவீர்கள்.
பூசம்: குடும்பத்தில் உள்ள இளம் வயதினரிடம் முன்னேற்றங்கள் ஏற்படும்.
ஆயில்யம்: நீண்ட நாளாக மனதில் இருந்து வந்த கவலை ஒன்று தீரும்.

சிம்மம்: 
மகம்: வீட்டில் சுபநிகழ்வுகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் துவங்கும்.
பூரம்: குடும்பத்தினர் பெருமை சேர்க்கும் வகையில் நடந்து கொள்வார்கள்.
உத்திரம் 1: எதிர்பார்த்த நன்மை கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி அடைவீர்கள்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்.
அஸ்தம்: நீங்கள் எதிர்பார்த்த தொகை ஒன்று கிடைக்கும். நிம்மதி மீளும்.
சித்திரை 1,2: அவசியமற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.

துலாம்: 
சித்திரை 3,4: எதிர்பாராத நற்செய்தி ஒன்று வந்து மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைக்கும்
சுவாதி: குடும்பத்தினரால் சந்தோஷம் ஏற்படும். சேமிப்பு அதிகரிக்கும்.
விசாகம் 1,2,3: பணவரவு கூடும். உறவினர்கள் மூலம் உதவி கிடைக்கும்.

விருச்சிகம்: 
விசாகம் 4: நண்பர்களின் சந்திப்பு உங்களுக்கு பெரிதும் உதவும். பயம் நீங்கும்.
அனுஷம்: வெளி மனிதரால் ஏற்பட்டு வந்த பிரச்னை ஒன்று நீங்கும்.
கேட்டை: கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. பேச்சில் கவனம் தேவை.

தனுசு: 
மூலம்: பணியிடத்தில் இருந்து வந்த பிரச்னை ஒன்று முடிவுக்கு வரும்.
பூராடம்: நன்மை ஒன்று நிகழ்வதால் மனதில் பரபரப்பு கூடும்.
உத்திராடம் 1: மூத்தோரின் ஆரோக்கியத்தில் ஏற்பட்டிருந்த பாதிப்புகள் நீங்கும்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: கடந்த சில நாட்களாக இருந்து வந்த சிக்கல்கள் தீரும்.
திருவோணம்: கலைஞர்களுக்கு புதிய வாய்ப்பு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்
அவிட்டம் 1,2: தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது.

கும்பம்: 
அவிட்டம் 3,4: சகபணியாளர்கள் உங்களுக்கு நன்கு ஒத்துழைப்பு தருவார்கள்.
சதயம்: உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
பூரட்டாதி 1,2,3: நீண்ட நாள் பிரச்னை ஒன்று முடிவுக்கு வரும்.

மீனம்: 
பூரட்டாதி 4: உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டிருந்த பாதிப்புகள் நீங்கும்.
உத்திரட்டாதி: கடந்த சில நாட்களாக இருந்த சிக்கல்கள் நீங்கும்.
ரேவதி: தொழில் பற்றிய புதிய முயற்சியை நன்கு ஆராய்ந்து செய்யவும்.