சீன புத்தாண்டு இன்று: புலி ஆண்டு வசந்த விழாவாக இந்த வருடப் பிறப்பு கொண்டாடப்படுகிறது

Mayoorikka
4 years ago
சீன புத்தாண்டு இன்று:  புலி ஆண்டு வசந்த விழாவாக இந்த வருடப் பிறப்பு கொண்டாடப்படுகிறது

சீன புத்தாண்டு செவ்வாய்க்கிழமை (பெப். 1) தொடங்குவதை ஒட்டி, நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ஷி ஜின்பிங் வாழ்த்து தெரிவித்துள்ளாா். வசந்த விழாவாக கொண்டாடப்படும் புத்தாண்டை முன்னிட்டு அரசு அலுவலகங்களுக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் 12 விலங்குகளின் பெயரில் வருடப் பிறப்பு கொண்டாடப்படுகிறது. இந்த 12 வருடங்கள் நிறைவடைந்ததும் மீண்டும் சுழற்சி தொடங்கும். அந்த வகையில் எருது ஆண்டு திங்கள்கிழமை நிறைவடைந்து, புலி ஆண்டு பெப். 1 ஆம் திகதி தொடங்குகிறது.

வசந்த விழாவாக இந்த வருடப் பிறப்பு கொண்டாடப்படுகிறது. சீன கலாசாரப்படி புலியானது தைரியம் மற்றும் வலிமையைக் குறிக்கிறது. அதன்படி, புதிய ஆண்டு மக்களைத் துன்பத்திலிருந்து மீட்டெடுத்து அமைதியை அளிக்கும் என்பது நம்பிக்கை.

இந்த வசந்த விழாவையொட்டி, உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான சீன மக்கள் புத்தாண்டைக் கொண்டாட தங்களது சொந்த ஊா்களுக்குச் செல்வாா்கள். நிகழாண்டு கரோனா பரவல் பிரச்னை இருந்தபோதும் வெளிநாடுகளிலிருந்து சீனா திரும்பும் மக்கள் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.

வசந்த விழாவை முன்னிட்டு சீனாவில் அரசு அலுவலகங்களுக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ஷி ஜின்பிங் விடுத்துள்ள வசந்த விழா செய்தியில், ஒற்றுமையின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியுள்ளாா்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4