அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் 02.02.2022

Keerthi
2 years ago
அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் 02.02.2022

மேஷம்: 
அசுவினி: உங்களுடன் வேலை பார்ப்பவர்களால் வந்த சிரமம் விலகும்.
பரணி: சுபச்செய்திகள் வரும். நீங்கள் செய்யும் பணி சிறப்படையும்.
கார்த்திகை 1: எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் அதை சமாளிப்பீர்கள்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: எதிர்பாலினத்தைச் சேர்ந்த ஒருவரின் உதவி கிடைக்கும்.
ரோகிணி: பொதுநல சேவை செய்து பிறரிடம் பாராட்டு பெறுவீர்கள்.
மிருகசீரிடம் 1,2: மற்றவர் நலனில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சிறப்பாக பயன்படுத்துவீர்கள்.
திருவாதிரை: புதிதாய் நட்பாகும் நபர்களிடம் அதிக நெருக்கம் காட்ட வேண்டாம்.
புனர்பூசம் 1,2,3: சிறு சங்கடம் ஒன்று ஏற்பட்டாலும் அது இன்றே நீங்கும்.

கடகம்: 
புனர்பூசம் 4: பணியாளர்கள் அகங்காரம் இன்றி செயல்படுவது நல்லது.
பூசம்: ரகசியங்களை கையாளுவதில் கவனம் தேவை. சாதனை புரிவீர்கள்.
ஆயில்யம்: பணியாளர்களுக்கு வேலைப்பளு சற்றுக் குறையும்.

சிம்மம்: 
மகம்: கூடுதல் முயற்சி எடுப்பதால் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும்.
பூரம்: உங்களது கவுரவம் அதிகரிக்கும்படியான செயல் ஒன்றை செய்வீர்கள்.
உத்திரம் 1: முழுமனதுடன் செயலாற்றி சாதகமான பலன்களை பெறுவீர்கள்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: பொறுப்பான பணியில் உள்ளோர் பயணம் செல்ல நேரலாம்.
அஸ்தம்: புதிய வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வரும்.
சித்திரை 1,2: மனதிற்குப் பிடித்தவர்களை சந்தித்து சந்தோஷம் அடைவீர்கள்.

துலாம்: 
சித்திரை 3,4: அதிர்ஷ்டம் கூடும். கூடுதலாக உழைத்து பாராட்டு பெறுவீர்கள்.
சுவாதி: சவால்களை எளிதாக முடிப்பீர்கள். சிறு வெற்றி ஒன்று கிடைக்கக்கூடும்.
விசாகம் 1,2,3: உங்களின் திட்டம் சிறு திருப்பத்துக்குப் பிறகு நிறைவேறும்.

விருச்சிகம்: 
விசாகம் 4: நண்பர்களுக்கு உதவி செய்து நிம்மதியை ஏற்படுத்துவீர்கள்.
அனுஷம்: உங்களது செயல்பாடுகளிலும், பணியிலும் அதிக கவனம் தேவை.
கேட்டை: புதிய திட்டத்தில் மாறுதல் செய்வதால் வெற்றி கிடைக்கும்.

தனுசு: 
மூலம்: பேச்சு, செயலில் கவனமாக இருக்க வேண்டிய நாள்.
பூராடம்: புதிய நபர்களை அதிகம் நம்பாமல் எச்சரிக்கையாக பழகுங்கள்.
உத்திராடம் 1: பாராட்டுக்களை பற்றி அதிகப் பெருமிதம் கொள்ள வேண்டாம்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: சிறிய செலவு உண்டாகலாம். விரும்பிய மாற்றம் வரும்.
திருவோணம்: வாழ்வில் வெளிச்சமான சூழல் உருவாகி மகிழ்ச்சி தரும்.
அவிட்டம் 1,2: மன நிறைவுக்காக கூடுதலாக செலவு செய்ய வேண்டி வரலாம்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: குடும்பத்தில் தேவையற்ற பிரச்னைகள் உருவாக விடாதீர்கள்.
சதயம்: எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும்.
பூரட்டாதி 1,2,3: மேலதிகாரியின் உத்தரவை மீற முயற்சிக்க வேண்டாம்.

மீனம்: 
பூரட்டாதி 4: நண்பர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும் சரியாகிவிடும்.
உத்திரட்டாதி: மனதில் தோன்றும் கற்பனைக் கவலைகளை விரட்டுங்கள்.
ரேவதி: கூடுதல் முயற்சி காரணமாக எடுத்த செயலில் வெற்றி காண்பீர்கள்.