சிறைச்சாலையில் ஒரேநாளில் 195 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி
#Prison
#Covid 19
Prasu
2 years ago
சிறைச்சாலை ஒன்றில் உள்ள 195 கைதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
Loire மாவட்டத்தில் உள்ள Roanne சிறைச்சாலையிலேயே இந்த தொற்று ஏற்பட்டுள்ளது. பெப்ரவரி 1 ஆம் திகதி நேற்று செவ்வாய்க்கிழமை இந்த தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு 479 கைதிகள் சிறைவைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் அரைவாசி கைதிகளுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்த கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, கைதிகளை வெளி ஆட்கள் பார்வையிடுவது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.
தொற்று உறுதி செய்யப்பட்ட அனைத்து கைதிகளுக்கும் ஒமிக்ரோன் திரிபு வைரசே ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.