பொரளை தேவாலய குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மூவரை விடுதலை செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதிவான் உத்தரவு

Prasu
4 years ago
பொரளை தேவாலய குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மூவரை விடுதலை செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதிவான் உத்தரவு

பொரளை தேவாலய குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தேவாலய ஊழியர் உட்பட மூவரை விடுதலை செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற வைத்தியர் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஜனவரி 11ஆம் திகதி பொரளையில் உள்ள அனைத்து புனிதர்களின் தேவாலயத்தில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

இதேவேளை, பொரளையில் உள்ள அனைத்து புனிதர்களின் தேவாலயத்தின் மீதான குண்டுவெடிப்பு தொடர்பான கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் விசாரணைகளை மேற்பார்வையிடுவதற்கு சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் சட்டமா அதிபரால் நியமிக்கப்பட்டார்.

இதேவேளை, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் இரகசிய வாக்குமூலமொன்றை வழங்கியிருந்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4