சர்ச்சையை கிளப்பிய இங்கிலாந்து ராணியின் மெழுகு சிலை...விளக்கம் அளித்த அருங்காட்சியகம் (புகைப்படங்கள் உள்ளே)
95 வயது நிரம்பிய இங்கிலாந்து மகாராணி எலிசெபத், தற்போது உலகின் மூத்த மற்றும் நீண்ட காலம் ஆட்சி செய்த ராணியாக இருக்கிறார்.
கடந்த செப்டம்பர் 2015 -ல் பிரிட்டன் வரலாற்றில் அதிக காலம் ஆட்சி செய்த தனது கொள்ளுபாட்டியான விக்டோரியாவின் சாதனையை முறியடித்தார். இந்த வரலாற்று சாதனையை படைத்த போது பேசிய அவர், ' இது நான் ஆசைப்பட்ட ஒன்றல்ல' என்று கூறினார். இவர் தற்போது அரசக்குடும்பத்தின் இல்லமான பக்கிங்ஹாம் அரண்மனையில் வசித்து வருகிறார்.
இங்கிலாந்து அரசின் ராணியாக திகழும் இராண்டாம் எலிசெபத்தின் மெழுகு சிலை ஜெர்மனியில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. ஆனால் மகாராணி அணிந்திருந்த தொப்பியின் கீழே இருந்த ராணியின் தலை வழுக்கைத் தலையாக இருக்கும் படி அந்த சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்த சிலை சர்ச்சையை கிளப்பிய நிலையில், இது குறித்து சம்பந்தப்பட்ட அருங்காட்சியகத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விளக்கம் அளித்த அருங்காட்சியகத்தின் நிர்வாக பங்குதாரர், சுசேன் ஃபேர்பர் ( Susanne Faerber) 'பணத்தை சேமிப்பதற்காகவே இவ்வாறு செய்துள்ளோம். பார்வையாளர்களுக்கு தெரியும் படியான முடியை நாங்கள் நிறுவியிருக்கிறோம்.இது ஒரு மெழுகு சிலை, உண்மையான நபர் இல்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும்.' என்றார்.
மேலும் பேசிய அவர், ' ஜெர்மனியில் இருக்கும் அவரது மாட்சிமை என்பது பிரிட்டனில் அரச குடும்பத்தில் கையாளப்படும் மாட்சிமையை விட வித்தியாசமானது. அங்கு பத்திரிகையாளர்கள் அதிக உணர்வுடன் கையாள வேண்டும்.'என்று பேசினார்
முன்னதாக, இதற்கு முன் இந்த அருங்காட்சியகத்தில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், போப் பெனடிக்ட் XVI, சுற்றுசூழல் ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க் மற்றும் ஜேர்மனியின் முன்னாள் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் போன்ற பிரபலங்களின் சிலைகள் உள்ளன.