மாவட்ட செயலக முற்றுகை போராட்டம் ஒருவரின் வருகையால் மேலும் பதற்ற நிலை!

Mayoorikka
4 years ago
மாவட்ட செயலக முற்றுகை  போராட்டம் ஒருவரின் வருகையால் மேலும் பதற்ற நிலை!

யாழ்ப்பாணம் - மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு இன்றையதினம் மீனவர்கள் முன்னெடுத்து வரும் போராட்ட களத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வருகை தந்ததால் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்போது இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி வரும் இந்திய படகுகளை நிரந்தரமாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனும் உத்தரவை எழுத்து மூலமாக தர வேண்டும் என மீனவர்களால் அமைச்சரிடம் கோரிகை முன்வைக்கப்பட்டது.

இதற்கு பதில் வழங்கிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எழுத்து மூலமான உத்தரவாதம் தர முடியாது எனவும் தான் வாய் மூலமாகவே உத்தரவாதத்தையே தர முடியும் என கூறியதை அடுத்து அங்க பதட்ட நிலை ஏற்பட்டது.

பின்னர் போராட்ட களத்தில் இருந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளியேறிய நிலையிலும் மீனவர்கள் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4