பிரித்தானியாவில் முகக் கவசத்தை கழட்டியதால் நபரொருவருக்கு 2000 பவுன்ஸ் அபராதம்

Keerthi
2 years ago
பிரித்தானியாவில் முகக் கவசத்தை கழட்டியதால் நபரொருவருக்கு 2000 பவுன்ஸ் அபராதம்

முகக் கவசத்தை கழட்டியதால் நபரொருவருக்கு 2000 பவுன்ஸ் (இலங்கை மதிப்பில் 542420 ரூபா) அபராதமாக விதிக்கப்பட்ட சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.

பிரித்தானியாவில் கொரோனாத் தொற்றுப் பரவர் தீவிரம் அடைந்து வருவதால் அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில்  கிறிஸ்டோபர் என்ற குறித்த நபர் முகக் கவசம் அணிந்து கொண்டு கடையொன்றுக்குச் சென்றுள்ளதாகவும், அங்கு முகக் கவசத்தை அவர் கழற்றி மாற்றியுள்ளதாகவும், இதன் போது அங்கு வந்த பொலிஸார் அவர் முகக் கவசம் இல்லாமல் இருப்பதைப் பார்த்து அவருக்கு 2000 பவுன்ஸை செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனது  முழு ஊதியத்தை வைத்து கூட குறித்த அபராத தொகையை என்னால் கட்ட முடியாது என அந்நபர் புலம்பி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!