குத்துச் சண்டைப் போட்டியில் தங்க பதக்கம் வென்ற இந்துகாதேவிக்கு பணத்தொகையை அன்பளிப்பாக வழங்கிய சூரிச் SKT நாதன் கடை உரிமையாளர்.

Keerthi
4 years ago
குத்துச் சண்டைப் போட்டியில் தங்க பதக்கம் வென்ற இந்துகாதேவிக்கு பணத்தொகையை அன்பளிப்பாக வழங்கிய சூரிச் SKT நாதன் கடை உரிமையாளர்.

தங்கமகளுக்கு அன்பளிப்பும் வழங்கி  எதிர்கால போட்டிகளுக்கு உதவுவதாக உறுதியளித்த சுவிஸ் நாதன்கடை உரிமையாளர்.

பாகிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச குத்துச் சண்டைப் போட்டியில் தங்க பதக்கம் வென்ற கரிபட்ட முறிப்பு முல்லைத்தீவினைச் சேர்ந்த 
செல்வி.கணேஸ் இந்துகாதேவி அவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு ஒன்றினை குறித்த கிராமத்தின் விளையாட்டு கழகங்கள் மற்றும் ஒட்டிசுட்டான் இளைஞர் சேவைகள் மன்ற சம்மேளனம் என்பன இணைந்து நேற்று(02.02.22)நடாத்தினர்.

இந்நிகழ்வில் சுய விருப்பின் பேரில் பங்கு கொண்டிருந்த காரைநகரை பிறப்பிடமாகவும் சுவிஸ் நாட்டின் மிகப்பெரிய வர்த்தகருமாகிய திரு.S.K.நாதன் ( சூரிச் SKT நாதன் கடை உரிமையாளர்) அவர்கள் இந்துகாவைப் பாராட்டியதோடு மட்டுமன்றி அவரின் முன்னேற்றத்திற்காகவும், தொடர் சாதனைக்காகவும் ரூபா 300,000/-(மூன்று இலட்சத்தினை) அன்பளிப்பாக வழங்கியதுடன் இந்துகாவின் தொடர் சாதனைகளுக்கு தொடர்ந்தும் ஊக்கமளிப்பதாக உறுதிவழங்கியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிகழ்வில் முல்லை மாவட்ட அரசாங்க அதிபர்,ஒட்டிசுட்டான் பிரதேச செயலர்,மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஆகியோரும் இந் நிகழ்வில் பங்கு கொண்டிருந்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4