பாகிஸ்தான் இராணுவ முகாம் மீது தாக்கியது யார்? தலீபான் மீது கடும் அதிருப்தி

Keerthi
4 years ago
பாகிஸ்தான் இராணுவ முகாம் மீது தாக்கியது யார்?  தலீபான் மீது கடும் அதிருப்தி

பாகிஸ்தானில் இருவேறு இடங்களில் இராணுவ முகாம்கள் மீது தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதல்களில் 4 இராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வடமேற்கு மாகாணமான பாலுசிஸ்தானில் தீவிரவாதிகள் தொடர் தாக்குதல்களை நிகழ்த்தி வரும் நிலையில், கடந்த வாரம் கெச் மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் 10 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், பாலூசிஸ்தான் மாகாணத்தில் நௌஷ்கி நகருக்கு அருகிலும் பஞ்ச்கூர் மாவட்டத்திலும் புதன்கிழமை மாலை அடுத்தடுத்து தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன.

தாக்குதல்களை பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் வெற்றிகரமாக முறியடித்ததாகவும் இதில் 15 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் கூறியுள்ளார். இந்த தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4