யாழில் பிறந்து 02 நாட்களேயான குழந்தை உட்பட வடக்கு மாகாணத்தில் 24 பேருக்கு கொரோனா!

#SriLanka
Nila
4 years ago
யாழில் பிறந்து 02 நாட்களேயான குழந்தை உட்பட வடக்கு மாகாணத்தில் 24 பேருக்கு  கொரோனா!

யாழ். மாவட்டத்தில் பிறந்து 02 நாட்களேயான பெண் குழந்தை உட்பட வடக்கு மாகாணத்தில் 24 பேருக்கு இன்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில், யாழ்.போதனா வைத்தியசாலையில், 08 வயதுச் சிறுமி ஒருவர் உட்பட 17 பேர், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் பிறந்து 02 நாள்களேயான பெண் குழந்தை உட்பட்ட இருவர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒருவர், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர், மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர் எனத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4