இலங்கையில் அதிகரிக்கும் ஒமிக்ரோன் மாறுபாடு-நாடு மீண்டும் முடக்கப்படுமா?
ஒமிக்ரோன் மாறுபாட்டை கட்டுப்படுத்த நாட்டை முடக்கவோ அல்லது சட்டத்தை கடுமையாக்கவோ முடியாதென சுகாதார பிரிவு தெரிவித்துள்ளனர்.
சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் மாத்திரமே அதனை கட்டுப்படுத்த முடியும் என பிரதி சுகாதார பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பெரும்பான்மையானோர் ஒமிக்ரோன் மாறுபாடினால் பாதிக்கப்பட்டவர்கள் என உறுதியாக கூற முடியும்.
சுகாதார கட்டுப்பாடுகளை உரிய முறையில் மக்கள் பின்பற்றினால் இதனை கட்டுப்படுத்த முடியும். அதனை தவிர்த்து இந்த தொற்றில் இருந்து விடுபடுவதற்கு எவ்வித மாற்று வழிகளும் இல்லை.
மீண்டும் ஒரு போதும் நாட்டை மூட முடியாது. ஏற்கனவே நாடு முடக்கப்பட்டமையினால் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நேரிட்டது. இதனால் மீண்டும் நாட்டை முடக்க முடியாது.
மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சுகாதார பிரிவினருக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.