உயிரிழந்த மீனவர்களின் ஆத்மா பேசுகிறேன்! போராட்ட களத்தில் பரபரப்பு

Mayoorikka
4 years ago
உயிரிழந்த மீனவர்களின் ஆத்மா பேசுகிறேன்! போராட்ட களத்தில் பரபரப்பு

உயிரிழந்த மீனவர்களின் ஆத்மாவாக கேட்கிறேன் " அத்துமீறல்களை கட்டுப்படுத்தி , உயிரோடு வாழும் மீனவர்களை காப்பாற்றுங்கள்" என ஒருவர் கோரிக்கை விடுத்து மீனவர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். 

வடமராட்சி சுப்பர்மடம் பகுதியில் ஐந்தாவது நாளாக இன்றைய தினமும் மீனவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் கறுப்பு  உடை தரித்து போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவரே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் கடலில் உயிரிழந்த மீனவர்களின் ஆத்மாவாக, இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்துமாறு கோருகிறேன். அதேவேளை இந்திய மீனவர்களிடமும் , எமது கடல் வளங்களை , எமது சக மீனவர்களின் வாழ்வாதரத்தை, உயிரை அழைக்காதீர்கள் என கோருகிறேன். 

உயிர் வாழும் மனிதர்களாக பல தடவைகள் பலரிடம் கோரிக்கை விடுத்தும் எதுவும் நடவடிக்கை. ஐந்து நாட்களாக தொழிலுக்கு செல்லாமல் தொடர் போராட்டத்தினை முன்னெடுத்து வருகிறோம்.  எமக்கான தீர்வினை தருவதற்கு எவரும் தயாராக இல்லை. 

அதனால் , உயிரிழந்த மீனவர்களின் ஆத்மாவாக கோரிக்கை விடுக்கிறேன். உயிரிழந்த மீனவர்களின் ஆத்மாவிற்கு மதிப்பளித்தாவது , நடவடிக்கைகளை எடுங்கள். அந்த மீனவர்களின் ஆத்மா சாந்தியடையும் என தெரிவித்தார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4