அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதிக்கு டொலர்களை விடுவிக்கவும்

Mayoorikka
2 years ago
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதிக்கு டொலர்களை விடுவிக்கவும்

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதிக்கு மாதாந்தம் 175முதல் 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் விடுவிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு ஜனாதிபதி  செயலாளர் காமினி செனரத்தை சந்தித்து, இறக்குமதியாளர்கள் கோரியுள்ளனர்.

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, நாட்டில் ஏற்படவுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான பற்றாக்குறையைத் தவிர்ப்பதற்காக இந்த கோரிக்கையை அவர்கள் முன்வைத்துள்ளனர்.

துறைமுகத்தில் சிக்கியுள்ள சுமார் 1,500 கொள்கலன்களின் பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்வதற்கு செலுத்தப்பட வேண்டிய  அமெரிக்க டொலர்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன டெய்லி மிரருக்கு தெரிவித்தார்.

எவ்வாறாயினும் தற்போது நாட்டில் தற்போது அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு இல்லை என்றும் அவர் கூறினார்.

எனினும் சர்வதேச கம்பனிகளுக்கு செலுத்துவதற்கு அந்நிய செலாவணி கிடைக்கப்பெறாவிட்டால் அது இலங்கை வர்த்தகர்களின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்யும் எனவும் சுட்டிக்காட்டினார்.

இலங்கை தற்போது பருப்பு, கோதுமை மா, பருப்பு, சர்க்கரை மற்றும் அரிசி போன்ற உணவுப் பொருட்களை சர்வதேசத்திடமிருந்து இறக்குமதி செய்கிறது.