கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு சென்ற பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை!

Mayoorikka
4 years ago
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு சென்ற பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை!

பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இன்று (04) காலை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு வருகை தந்தார்.

பொரளை தேவாலய குண்டு வைப்பு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரான்சிஸ் முனீந்திரனின் நலன் குறித்து விசாரிக்க அவர் இவ்வாறு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொரளையில் உள்ள அனைத்து புனிதர்களின் தேவாலயத்தில் வெடிகுண்டு போன்ற வடிவிலான கைக்குண்டு வைக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள தேவாலயத்தின் ஊழியரான பிரான்சிஸ் முனீந்திரன் தற்போது கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரின் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

பேராயர் அங்கு வந்த போது அப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட பொலிசார் குவிக்கப்பட்டிருந்ததை காணக்கூடியதாய் இருந்தாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4