Paxlovid எனும் புதிய வகை கொரோனா வில்லை பிரான்சில் Pfizer நிறுவனத்தால் அறிமுகம்
#Covid Vaccine
Prasu
2 years ago
பிரான்சில் புதிய வில்லை வடிவிலான கொரோனா தடுப்பு மருந்து ஒன்று பயன்படுத்தப்பட உள்ளது.
Paxlovid எனும் புதிய வில்லைகளே பிரான்சில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த வில்லைகளை கொரோனா தடுப்பூசிகளை தயாரிக்கும் Pfizer நிறுவனம் தயாரித்துள்ளது. பல கட்ட மருத்துவ தரப்பினரால் பரிசோதிக்கப்பட்டு இறுதியாக இந்த வில்லைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வில்லைகள் 89% வீத செயற்திறன் கொண்டது எனவும், கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தேவையை இது குறைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை, பெப்ரவரி 4 ஆம் திகதி முதல் இந்த Paxlovid வில்லைகள் பயன்பாட்டுக்கு வருகின்றது.