அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் பாதுகாப்பு பகுதிக்குள் நுழைந்த கோழிக்கு காவல்

Keerthi
4 years ago
 அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் பாதுகாப்பு பகுதிக்குள் நுழைந்த கோழிக்கு காவல்

அமெரிக்காவின் ராணுவ தலைமையகமாக விளங்குவது பென்டகன். இங்கு எளிதாக யாரும் சென்று விட முடியாது. கடுமையான பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டிற்கும். இந்த நிலையில் சோர்வான கோழி என்று பென்டகனுக்குள் நுழைந்து பாதுகாப்பு வளையத்திற்குள் காணப்பட, பாதுகாப்பு ஊழியர்கள் அதை பிடித்து காவலில் அடைத்தனர்.

உள்ளூர் விலங்குகள் ஆர்வல அமைப்பு கூறுகையில் ‘‘பிடிப்பட்ட கோழி திங்கட்கிழமை காலை அமெரிக்காவின் பாதுகாப்புத்துறையின் தலைமையகம் அருகில் சுற்றித்திரிந்துள்ளது’’ எனத் தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் செல்சி ஜோன்ஸ், ‘‘கோழி சரியாக எந்த இடத்தில் காணப்பட்டது என்பது குறித்து கூற முடியாது. அதை வெளிப்படுத்த அனுமதிக்கப்படவில்லை. பாதுகாப்பு செக்போஸ்ட் அருகே பிடிபட்டதாக மட்டுமே எங்களால் கூற முடியும்’’ என்றார்.

இதுகுறித்து ஜிம்மி பாலன் தன்னுடைய ‘The Tonight Show’, வேடிக்கையாக நீங்கள் சாதாரண கோழியா? அல்லது ரகசிய உளவாளியா? எனக் குறிப்பிட்டார்.

பின்னர், சிறு கோழி பண்ணை வைத்திருக்கும் ஒருவரிடம் கோழி ஒப்படைக்கப்பட்டது.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4