மருத்துவ மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராகம மருத்துவ கல்லூரிக்கு முன்பாக நேற்று இரவு கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டன

Keerthi
2 years ago
மருத்துவ மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராகம மருத்துவ கல்லூரிக்கு முன்பாக நேற்று இரவு கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டன

ராகம மருத்துவ பீடத்தின் நான்காம் வருட மாணவனை அருந்திக பெர்னாண்டோவின் மகன் உள்ளிட்ட குண்டர் கும்பல் கடத்திச் செல்ல முயற்சித்ததன் காரணமாக விடுதியில் மோதல் ஏற்பட்டுள்ளதாக அரச மருத்துவ பீட மாணவர் பெற்றோர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த முரண்பாடு தொடர்பில் அரச மருத்துவ பீட மாணவர்களின் பெற்றோர் சங்கம் இன்று தெளிவுபடுத்தியுள்ளது.

இதேவேளை, இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து அருந்திக பெர்னாண்டோ தற்காலிகமாக இராஜினாமா செய்ததன் மூலம் சம்பவத்தை மூடிமறைக்கும் முயற்சி இடம்பெற்றதாக இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் குற்றஞ்சாட்டியுள்ளது.

மருத்துவ மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து களனிப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் ஆகியன இணைந்து ராகம மருத்துவ கல்லூரிக்கு முன்பாக நேற்று இரவு கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தன.