இலங்கையிலுள்ள அரச வைத்தியசாலைகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

#SriLanka
Nila
2 years ago
இலங்கையிலுள்ள அரச வைத்தியசாலைகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

அரச வைத்தியசாலைகள் மற்றும் வைத்திய நிலையங்களில் கடமையாற்றும் சுமார் 500 தாதிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு பாதிப்புக்குள்ளானவர்களுள் கர்ப்பிணித் தாய்மார் மற்றும் இரண்டு வயதுக்கு கீழ் குழந்தைகளுள்ள தாய்மாரும் அடங்கியுள்ளனர்.

இதனை, அகில இலங்கை தாதியர் சங்கத்தின் செயலாளர் எஸ். பி மெதவத்த தெரிவித்துள்ளார்.

மேலும், தேசிய வைத்தியசாலையில் 200 தாதியர் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அதில் 21 கர்ப்பிணிகளும் அடங்குவவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதன்படி டி சொய்சா மகளிர் வைத்தியசாலையில் ஐந்து கர்ப்பிணித் தாய்மாரும் கண்டி அரச வைத்தியசாலையில் நான்கு தாதிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை நாட்டில் மீண்டும் கொரோனா பரவ ஆரம்பித்துள்ளதால் தொற்றுக்குள்ளான தாதியருக்கும் பாலூட்டும் தாதியருக்கும் விசேட விடுமுறை வழங்கும்படி தாதியர் சங்கம் சுகாதார அமைச்சை கேட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.