உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பம்: தனிமைப்படுத்தப்பட்டுள்ள பரீட்சார்த்திகளுக்காக, விசேட பரீட்சை மையங்களும் அமைப்பு

#exam
Reha
2 years ago
உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பம்: தனிமைப்படுத்தப்பட்டுள்ள பரீட்சார்த்திகளுக்காக, விசேட பரீட்சை மையங்களும் அமைப்பு

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாளை (7) முதல் ஆரம்பமாகவுள்ளது.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.

நாளை(7) முதல், எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதிவரை, 2,437 பரீட்சை மையங்களில் உயர்தரப் பரீட்சை இடம்பெறவுள்ளது.

345, 242 பரீட்சார்த்திகள் இந்தப் பரீட்சையில் தோற்றவுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அவர்களில், 279,141 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 66, 101 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்குகின்றனர்.

கொவிட்-19 தொற்றுறுதியான மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பரீட்சார்த்திகளுக்காக, விசேட பரீட்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.