ஆசிரியர்கள் அறிந்திருக்கவேண்டிய சில ஆவணங்களும் பதிவேடுகளும்..பாகம்- 2

Prathees
2 years ago
ஆசிரியர்கள் அறிந்திருக்கவேண்டிய சில ஆவணங்களும் பதிவேடுகளும்..பாகம்- 2

4) குறுகிய நேர லீவுப் பதிவேடு.

மாதம் ஒன்றில் ஒரு மணித்தியாலயம் கொண்ட இரண்டு குறுகிய நேர லீவுகளை  ஆசிரியர்கள் பெற்றுக்கொள்ளலாம். ஒரு பாடசாலையில் அனைவரும் பெறுகின்ற குறிகிய லீவுகள் ஒரே பதிவேட்டில் பதியப்படும்.

பாடசாலையில் சேவையாற்றுகின்றவர்களில் குறித்த ஒரு தொகையினருககே ஒரு நாளில் குறுகிய கால லீவு வழங்கமுடியும் என்பதால் பாடசாலையின் செயற்பாடுகளை தடையின்றி நடாத்திச் செல்வதற்கு உதவுகின்ற அடிப்படையில் குறுகிய லீவு குறித்து முன்னதாகவே அறிவித்துக்கொள்வது சிறந்தாகும். 

5) புகையிரதப் பயணச்சீட்டுக் கோவை 

 புகையிரத ஆணைச்சீட்டு ஒன்றினைப் பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பம் ஒன்றினைச் சமர்ப்பிக்க வேண்டும். 

 ஒரு உத்தியோகத்தருக்கு புகையிரத ஆணைச்சீட்டுகள் 3 தொகுதியினைப்பெற்றுக்கொள்ளலாம் (செல்வதற்கு திரும்புவதற்கு என 6 பயணச்சீட்டுகள் இதில் அடங்கும்).  உத்தியோகத்தரின் மனைவி அல்லது கணவன் அவர்களது பிள்ளகைளுக்கும் இந்தத் தெகுதிகள் வழங்கப்படும். திருமணம் ஆகாதவராக இருப்பின் தாயாருக்கு பயணச்சீட்டைப் பெற்றுக்கொள்ளலாம். துணைவர் அரச சேவையில் இருக்குமிடத்து அவர் பணிபுரியும் காலியாலயத்தில் புகையிரத ஆணைச்சீட்டு பெற்றுக்கொள்ளவில்லை என்பதனை உறுதி செய்யும் கடிதம் சமர்ப்பிக்க வேண்டும். 

6) ஆசிரியர்களுக்கான அறிவித்தல் பதிவேடு.  

ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகின்ற எழுத்துமூலமான அறிவித்தல்கள், பொறுப்புக்களை ஒப்படைத்தல், பாட விதானம் சம்பந்தப்பட்ட செயற்பாடுகள், இணைப் பாடவிதான செயற்படுகள் என்பவற்றை ஒப்படைக்கின்ற செயற்பாடுகள் இந்தப் பதிவேட்டின் ஊடாக வழங்கப்படும். 

 ஆசியரின் செயற்பாடுகள் குறித்து பதியப்படுகினற ஆவணம் என்பதால் இந்தப் பதிவேடு குழுக் காண்காணிப்பின் போது பரீட்சிக்கப்படும். .

தொடரும்...