காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்: அரச வைத்தியசாலைகள் முடங்கும் அபாயம்

Prathees
2 years ago
காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்: அரச வைத்தியசாலைகள் முடங்கும் அபாயம்

சுகாதார சேவையில் உள்ள பல தொழிற்சங்கங்கள், இன்று காலை 7 மணி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளதால் அரச வைத்தியசாலைகளின் பல பணிகள் முடங்கும் என தெரிவிக்கப்படுகிறது.

ஆய்வுகூட செயற்பாடுகள், பரிசோதனைகள், மருந்து விநியோகம் மற்றும் சிகிச்சைப் பரிசோதனைகள் உள்ளிட்ட பல பணிகள் இன்றையதினம் இடம்பெறாது என்று அறியமுடிகிறது.

எனவே, வைத்தியசாலைகளுக்குச் செல்லும் போது இன்றைய நிலைமைகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் சிறுவர் வைத்தியசாலைகள் மற்றும் மகப்பேறு வைத்தியசாலைகளில் இந்த வேலைநிறுத்தம் அமுலில் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் போன்ற ஆபத்தான நோயாளர்களுடன் நெருக்கமாகக் கையாளும் கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க மாட்டார்கள் என்று அரச கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தொழிநுட்பவியலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதன் காரணமாக அரச வைத்தியசாலைகளில் எக்ஸ்ரே ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன், அஞ்சியோகிராம், சிடி மற்றும் பெட் ஸ்கேன் ஆகியவை நடத்தப்படாது என்றும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.