இலங்கைக்கு ஜப்பானிடமிருந்து கிடைத்த மாபெரும் பரிசு

Prathees
2 years ago
இலங்கைக்கு ஜப்பானிடமிருந்து கிடைத்த  மாபெரும் பரிசு

போதைப்பொருள் மற்றும் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு பயன்படுத்தக்கூடிய வாகனங்கள் மற்றும் உபகரணங்களை ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு நன்கொடையாக வழங்குகிறது.

ஜப்பான் அரசாங்கத்தின் இரண்டாம் கட்ட மானியமாக இது இன்று (08) ஜனாதிபதி செயலகத்தில் ஜப்பானிய தூதுவர் Mizukosi Hideaki  அவர்களினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

இதில் 28 லேண்ட் க்ரூஸர்கள், ஒரு பிராடோ, வெடிபொருட்கள் மற்றும் போதைப் பொருட்களைக் கண்டறியும் மொபைல் ஸ்கேனர் யூனிட் உள்ளிட்ட உபகரணங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

இதன் மதிப்பு 700 மில்லியன் ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை காவல்துறை மற்றும் அரச பகுப்பாய்வாளர் திணைக்களம் சார்பாக பொலிஸ்மா அதிபர்  சி.டி. விக்கிரமரத்ன மற்றும் அரச பகுப்பாய்வாளர் கௌரி ரமண ஆகியோரிடம் வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் கையளிக்கப்பட்டன.

அமைச்சர் சரத் வீரசேகர, இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம,ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.