இணையத்தில் வைரல் ஆகும் ரஷ்ய ஜனாதிபதி மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதியின் புகைப்படங்கள் (உள்ளே)
Prasu
2 years ago
இரஷ்ய ஜனாதிபதி மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் ஆகியோரின் சந்திப்பு இணையத்தில் கேலிக்குள்ளாகியுள்ளது.
நேற்று திங்கட்கிழமை இரு நாட்டு ஜனாதிபதிகளும் சந்தித்துக்கொண்டனர். இரஷ்யா-உக்ரைன் நாட்டு விவகரங்களில் சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சியில் மக்ரோன் விளாதிமிர் புட்டினை சந்தித்திருந்தார். மொஸ்கோ நகரில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, நான்கு மீற்றர்கள் நீளம் கொண்ட மேஜை ஒன்றின் ஒரு புறத்தில் விளாதிமிர் புட்டினும், மறு புறத்தில் இம்மானுவல் மக்ரோனும் அமர்ந்து உரையாடினர்.
இந்த புகைப்படம் இணையத்தில் பரவ, உடனடியாக அது கேலிக்குள்ளானது. இணையத்தளத்தில் பல விதங்களில் இப்புகைப்படங்கள் உருமாற்றம் செய்யப்பட்டு பரபரப்பாக பகிரப்பட்டு வருகின்றது.