நான்கு பெரும் கட்சிகளுடன் ஜே.வி.பி கூட்டணி அமைக்காது - ஜே.வி.பி உறுப்பினரான கே.டி. லால்காந்த தெரிவிப்பு

Prasu
2 years ago
நான்கு பெரும் கட்சிகளுடன் ஜே.வி.பி கூட்டணி அமைக்காது - ஜே.வி.பி உறுப்பினரான கே.டி. லால்காந்த தெரிவிப்பு

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி ஆகியவற்றுடன் ஜே.வி.பி. கூட்டணி அமைக்காது – என்று அக்கட்சியின் அரசியல் குழு உறுப்பினரான கே.டி. லால்காந்த தெரிவித்தார்.

” ஜே.வி.பி. தலைமையிலான ஆட்சியையே நாட்டு மக்கள் தற்போது கோருகின்றனர். எனவேதான் எமது ஆட்சியில் எவ்வாறான திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்பது பற்றி நாம் விளக்கமளித்துவருகின்றோம். நாட்டை மீட்பதற்கான திட்டங்கள் எம் வசம் உள்ளன.

ஜே.வி.பி. மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க. அவர்தான் எமது ஜனாதிபதி வேட்பாளர். அதற்கு நானும் முழு ஆதரவை வழங்குவேன்.

விமல் வீரவன்ச உள்ளிட்டவர்களுக்கு எமது கட்சியிலோ அல்லது கூட்டணியிலோ இடமில்லை.” – என்றும் லால்காந்த குறிப்பிட்டார்.