கொழும்பை தலைசுற்ற வைக்கும் சுகாதார ஊழியர்கள் சங்க போராட்டம். மக்கள் பயணப் போக்குவரத்து இடையூரால் விசமம்

Reha
2 years ago
கொழும்பை தலைசுற்ற வைக்கும் சுகாதார ஊழியர்கள் சங்க போராட்டம். மக்கள் பயணப் போக்குவரத்து இடையூரால் விசமம்

சுகாதார தொழிற்சங்க ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று 4ஆவது நாளாகவும் தொடர்கிறது.

பதவி உயர்வு , இடர்கால கொடுப்பனவு , சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வை வழங்குமாறு இலங்கையின் சுகாதார தொழிற்சங்க ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கும் நிலையில், நேற்றுமுன்தினம் சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெலவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இந்த நிலையில் தாதியர், துணை மருத்துவ பணியாளர்கள் மற்றும் மருந்துவ பொருட்கள் விநியோக சேவை ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளன.

கொழும்பில் உள்ள சுகாதார அமைச்சின் அலுவலகத்திற்கு முன்னால் நேற்று சுகாதாரத்துறை தொழிற்சங்கத்தினர் அமைதி இன்மையை ஏற்படுத்தியிருந்தனர்.

இதன் காரணமாக கொழும்பு 07, நகர மண்டபம் பகுதியில் கடுமையான வாகன நெரிசலும் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.