மூன்றாவது தடுப்பூசியை மும்முரப்பபடுத்தும் சுகாதார தரப்பினர். பயபீதியில் மக்கள்.

#Corona Virus #Batticaloa #Covid Vaccine
Reha
2 years ago
மூன்றாவது தடுப்பூசியை மும்முரப்பபடுத்தும் சுகாதார தரப்பினர். பயபீதியில் மக்கள்.

இலங்கையில் மீண்டும் கொரோனாத் தொற்று அதிகரித்து வரும் நிலையில், மக்கள் அனைவரும் கட்டாயம் மூன்று தடுப்பூசிகளும் ஏற்ற வேண்டும் என சுகாதார தரப்பினர் வலியுறுத்தல் விடுத்துள்ளனர்.

அதுமட்டுமன்றி இது தொடர்பில் வர்த்தமானி மூலமான அறிவிப்பையும் அரசாங்கம் விடுத்துள்ளது. அதனடிப்படையில் எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதிக்குப் பின்னர் நாடளாவிய ரீதியில் தடுப்பூசி அட்டைகள் பரிசோதனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மட்டக்களப்பில்  பல இடங்களிலும் காவல்துறை மற்றும் இராணுவத்தினரால் தடுப்பூசி அட்டை  பரிசோதிக்கப்பட்டு வருகின்றது.

ஓமிக்ரோன் வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் மக்கள்  சுகாதார நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்றுவது ஒரு தற்காலிக பாதுகாப்பாக இருந்தாலும், தடுப்பூசி ஏற்றிக் கொள்வதே உயிரிழப்புகளில் இருந்து பாதுகாப்பு ஏற்படுத்தும் என சுகாதாரத் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இதேவேளை, பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி ஏற்றிக் கொள்ள வேண்டும் என்பதுடன், மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நாடுபூராகவும் அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

எனினும் இம்மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பூஸ்டர் தடுப்பூசியினை இதுவரை ஏற்றிக் கொள்ளவில்லை. ஆகவே தமக்கான பூஸ்டர் தடுப்பூசியினை ஏற்றிக் கொள்ளுமாறும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி ஜீ. சுகுணன் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்