உலகின் அதிக வயதான நபர் : 121வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார் ..!

Keerthi
2 years ago
உலகின் அதிக வயதான நபர் : 121வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார் ..!

'அண்ட்ரெலினோ வியர டி சில்வா 'இவர்  பிரேசிலில் உள்ள அபரேசிடா டி கோயானியா என்ற நகரில் வசித்து வருகிறார்.

இவர் தனது 121 வது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் .அவரது அடையாள அட்டையின்படி 1901 பிப்ரவரி 3ல் பிறந்த இவர் தனது 121 வது பிறந்தநாளை கடந்த சில நாட்களுக்கு முன் கொண்டாடியுள்ளார்.

இவரது அடையாள அட்டையில் உள்ள தகவல் உண்மையாக இருந்தால் ,  உலகில் வாழ்ந்து வரும் அதிக வயதான நபர் என்கிற பெருமையை  'அண்ட்ரெலினோ வியர டி சில்வா' பெறுவார்.