லண்டன் சிறையில் தற்கொலை செய்த இலங்கை தமிழன் தொடர்பில் வெளியான தகவல்கள்

#Suicide #UnitedKingdom #Death
Nila
2 years ago
லண்டன் சிறையில் தற்கொலை செய்த இலங்கை தமிழன் தொடர்பில் வெளியான தகவல்கள்

கடந்த 2018ஆம் ஆண்டு லண்டன் சிறையில் இலங்கை தமிழர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சிறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களே அதற்கு பொறுப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wormwood Scrubs சிறையில் கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் திகதி கேதீஸ்வரன் குணரத்னம் என்ற இலங்கை தமிழர் தனது உயிரை மாய்த்து கொண்டார்.

இறப்பதற்கு சில நாட்களாக உணவு உண்ண மறுத்து பட்டினியாக இருந்து வந்த அவர் தற்கொலை தொடர்பில் பேசி வந்ததாக மரண விசாரணை அதிகாரி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது போன்ற மனநிலையில் இருந்த குணரத்னத்தை சிறைச்சலை ஊழியர்கள் ஒவ்வொரு நாளும் பரிசோதனை செய்ய தவறியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிய பராமரிப்பு இன்மையினால் குணரத்னம் உயிரிழந்துள்ளதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், சிறைச்சாலையால் பணிக்கமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கு அடிப்படை பயிற்சி இல்லை மற்றும் அதிக வேலை செய்யும் சிறை அதிகாரிகள் அவர் உணவை சாப்பிட மறுத்ததை பதிவு செய்யத் தவறிவிட்டனர்.

மேலும், குணரத்னம் புகலிடம் கோரி விண்ணப்பிக்கலாம் என்ற முக்கிய விடயத்தையும் அவரிடம் தெரியப்படுத்தப்படவில்லை. இது தொடர்பிலான ஆவணங்கள் மற்றும், தொலைபேசி அழைப்புகளுக்கு சரியாக பதிலளிக்கப்படவில்லை. கைதியின் கோரிக்கை தீர்க்கப்படவில்லை.

பிரித்தானிய அதிகாரிகளின் மந்தமான போக்கினால் இந்த மரணம் இடம்பெற்றுள்ளது என கூறப்பட்டுள்ளது.