இன்றைய வேத வசனம் 13.02.2022: நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்!

#Prayer
Prathees
2 years ago
இன்றைய வேத வசனம் 13.02.2022: நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்!

(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை  கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)

நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்.  2 கொரிந்தியர் 5:7

மோகித் நடக்கும்போது, அவரால் சமநிலையில் சரியாக நடக்க இயலாத காரணத்தால் அவருடைய மருத்துவர் அவருக்கு சில உடற்பயிற்சி சிகிச்சைகளை பரிந்துரைத்தார். ஒருமுறை அவருடைய சிகிச்சையாளர் அவரிடம், “நீங்கள் எதை பார்க்கிறீர்களா அதையே அதிகமாக நம்புகிறீர்கள் அது தவறாக இருந்தாலும் கூட அதைத்தான் நம்புகிறீர்கள் எனேவே நீங்கள் உங்களுடைய உடலின் மற்ற அமைப்புகளை சார்ந்துகொள்வது இல்லை, ஏனெனில் நடக்கும்போது உங்கள் பாதத்தின் கீழ் நீங்கள் என்ன உணர்கிறீர்களோ மேலும் உங்கள் அகச்செவி உண்டாக்கும் உள்ளுனர்வுகளும் கூட நீங்கள் சமநிலையாய் நடப்பதற்கு உதவுகின்றன.” என்றார்.

“நீங்கள் எதை பார்க்கிறீர்களோ அதையே அளவுக்கு அதிகமாக நம்புகிறீர்கள்” இது ஒரு இளம் ஆடு மேய்ப்பனாக கோலியாத்தை எதிர்த்த தாவீதின் கதையை எனக்கு நினைவுபடுத்துகிறது.

நாற்பது நாட்களாக பெலிஸ்தியரின் மிகச்சிறந்த வீரனான கோலியாத், இஸ்ரவேலின் ராணுவத்திற்கு முன்பாக கொக்கரித்துக் கொண்டு, தன்னோடு சண்டையிடும்படி யாரையாகிலும் அனுப்புமாறு அவர்களை கிண்டல் செய்து கொண்டிருந்தான் (1சாமுவேல் 17:16). ஆனால் ஜனங்கள் இயல்பாக எதை கவனித்தார்களோ, அதுவே அவர்களுக்கு அச்சத்தை வருவித்தது. அப்பொழுதுதான் இளம் தாவீது அங்கே வருகிறார் ஏனெனில், அவருடைய தந்தை அவர் மூத்த சகோதரர்களுக்கு உணவுகளை வழங்குமாறு அவரை அங்கே அனுப்பியிருந்தார் (வ.18).

 இந்த சூழ்நிலையை தாவீது எப்படி பார்த்தார்? அவர் தன்னுடைய பார்வையை கொண்டல்ல, மாறாக தேவன்மேல் கொண்ட நம்பிக்கையில் அதை பார்க்கிறார். அவரும் ஒரு ராட்சதனை பார்த்தார், ஆனால் தேவன் தம்முடைய ஜனங்களை விடுவிப்பார் என்பதை உறுதியாய் நம்பினார். அவர் சிறுவனாய் இருந்த போதிலும் சவுல் ராஜாவிடம், “இவனிமித்தம் ஒருவனுடைய இருதயமும் கலங்க வேண்டியதில்லை; … நான் போய், இந்தப் பெலிஸ்தனோடே யுத்தம்பண்ணுவேன் ” என்றார் (வ.32). பின்பு கோலியாத்திடம் “யுத்தம் கர்த்தருடையது; அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார்” என்றார் (வ.47) அதைத்தான் தேவன் செய்தார்.

தேவனுடைய குணாதிசயத்தையும், வல்லமையையும் நாம் நம்புவது அவரோடு கூட பார்வையில் அல்ல விசுவாசத்தில் நெருங்கி வாழ உதவும்.