தமிழ்ப் பெண்ணுடன் திருமணம் வைரலாகும் கிளன் மக்ஸ்வெல் திருமண அழைப்பிதழ்!

Nila
4 years ago
தமிழ்ப் பெண்ணுடன் திருமணம் வைரலாகும் கிளன் மக்ஸ்வெல் திருமண அழைப்பிதழ்!

கிரிக்கெட் வீரர் கிளென் மக்ஸ்வெல் தமிழ் பெண் வினி ராமன் என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கிளென் மக்ஸ்வெல். ஐ.பி.எல் போட்டிகளில் பெங்களூரு அணிக்காக விளையாடும் கிளென் மக்ஸ்வெல், கடந்த சீசனில் அபாரமாக விளையாடினார். இதையடுத்து அவரை ரூ.11 கோடிக்கு தக்கவைத்தது பெங்களூரு அணி.

கிளென் மக்ஸ்வெல் அவுஸ்திரேலியாவில் வளர்ந்த தமிழகத்துப் பெண்ணான வினி ராமன் என்பவரை காதலித்து வந்தார். வினி ராமன் அவுஸ்திரேலியாவில் பார்மஸி படித்தவர். இவர்களுக்கு கடந்த 2020ஆம் ஆண்டு இந்திய முறைப்படி நிச்சயதார்த்தம் நடந்தது.

அதன்பின்னர் கொரோனா அச்சுறுத்தல், லொக்டவுன் என நெருக்கடியான நிலை தொடர்ந்ததால் அவர்களது திருமணம் தள்ளிப்போனது. இந்த நிலையில் கிளென் மக்ஸ்வெல், வினிராமன் திருமணம் வருகிற மார்ச் 27ஆம் திகதி நடைபெற உள்ளது.

வினி ராமன் சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த தமிழ் பெண் என்பதால், இவர்களது திருமண அழைப்பிதழ் தமிழ் முறைப்படி அச்சிடப்பட்டுள்ளது.

தற்போது இந்த அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ்ப்பெண்ணை மணக்கும் அவுஸ்திரேலிய கோடீஸ்வர பிரபலம்! வெளியான தமிழ்  பாரம்பரிய மஞ்சள் நிற பத்திரிக்கை - லங்காசிறி நியூஸ்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4