SL vs AUS - இரண்டாவது டி20 போட்டியில் சூப்பர் ஓவரில் அவுஸ்திரேலியா அணி வெற்றி

Prasu
4 years ago
SL vs AUS - இரண்டாவது டி20 போட்டியில் சூப்பர் ஓவரில் அவுஸ்திரேலியா அணி வெற்றி

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் சூப்பர் ஓவரில் அவுஸ்திரேலியா அணி வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 164 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அவுஸ்திரேலியா அணி சார்பில் ஜோஸ் இன்க்லிஸ் 48 ஓட்டங்களையும், ஆரோன் பின்ச் 25 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் துஷ்மந்த சமீர 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

அதன்படி, வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்பிற்கு 164 ஒட்டங்களை பெற்றுக் கொண்டதில் போட்டி சமநிலையில் முடிந்தது.

இதில் இலங்கை அணி சார்பில் பெதும் நிஸங்க 73 ஒட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

அணித்தலைவர் தசுன் சானக 34 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் ஜோஷ் ஹேசில்வுட் அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

அதன்படி, சூப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஒரு விக்கெட்டை இழந்து 5 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி மூன்று பந்துகள் மீதமிருக்க 9 ஓட்டங்களைப் பெற்று வெற்றிப் பெற்றது.

அதன்படி, மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் அவுஸ்திரேலியா அணி கைப்பற்றியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4