போலி சுகாதார அட்டைகள் தயாரித்து விற்பனை செய்த நால்வர் கைது
Prasu
2 years ago
சுகாதார அட்டைகளை (pass sanitaire) போலியாக தயாரித்து விற்பனை செய்துவந்த நால்வர் கொண்ட குழு ஒன்றை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று சனிக்கிழமை இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது. கைதானவர்கள் இதுவரை மூவாயிரத்துக்கும் அதிகமான போலி சுகாதார அனுமதி அட்டைகளை தயாரித்து விற்பனை செய்துள்ளனர் எனவும், காவல்துறையினர் மேற்கொண்டு வந்த விசாரணைகளின் முடிவில் இவர்கள் Auvergne-Rhône-Alpes மற்றும் Ile-de-France மாகாணங்களில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் அறிய முடிகிறது.
கைதானவர்களில் ஒருவர் இலத்திரனியல் காப்பு அணிவிக்கப்பட்டு, அவரது வீட்டிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 9 மாதங்கள் அவர் இதுபோன்று வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். ஏனைய மூவரும் நீதிமன்றத்தில் விரைவில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.