கட்டாய முகக்கவசம் தேவையில்லை. அமெரிக்க மாகாணங்களில் வெளியான அறிவிப்பு.!!!

Keerthi
2 years ago
கட்டாய முகக்கவசம் தேவையில்லை. அமெரிக்க மாகாணங்களில் வெளியான அறிவிப்பு.!!!

அமெரிக்காவில் 11 மாகாணங்களில் கட்டாயமாக முக கவசம் அணிய தேவையில்லை என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக உலக சுகாதார அமைப்பு, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற பல விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியது. அதன்படி, உலக நாடுகளும் கட்டுப்பாடுகளை பின்பற்றின. மேலும், தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவில் இருக்கும் ரோட் ஐலேண்ட், கனெக்டிகட், நிவேடா, மசாசூசெட்ஸ், கலிஃபோர்னியா, நியூஜெர்ஸி, வாஷிங்டன், டெலாவேர், நியூயார்க், ஒரீகன் மற்றும் இலினாய்ஸ் ஆகிய 11 மாகாணங்களில் கட்டாயமாக முகக்கவசம் அணிய தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அங்கு ஏராளமான மக்கள் தடுப்பூசி எடுத்துக் கொண்டதால், முக கவசம் அணியும் கட்டுப்பாட்டை தளர்த்த தீர்மானிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், பள்ளி கூடங்கள், மருத்துவமனைகள் போன்ற உள் அரங்குகளில் முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.