இத்தாலியில் கொரோனா தடுப்பூசி போடாத 50 வயதுக்கு மேற்பட்டோர் பணியாற்ற தடை

Keerthi
2 years ago
இத்தாலியில் கொரோனா தடுப்பூசி போடாத 50 வயதுக்கு மேற்பட்டோர் பணியாற்ற தடை

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்புகளில் இருந்து மக்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை.  கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், இத்தாலி நாட்டில் கடந்த ஜனவரி தொடக்கத்தில் 50 வயது கடந்தவர்கள் கட்டாயம் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்று அமைச்சரவை முடிவு செய்தது.  இதன்படி, இந்த பிரிவில் உள்ளவர்கள் முழு அளவில் தடுப்பூசி போட்டு கொண்டதற்கான சான்றிதழை காட்ட வேண்டும்.  அல்லது தடுப்பூசி விலக்கு சான்றிதழ்களை பெற்றிருக்க வேண்டும்.

அப்படி இல்லாத நிலையில், தடுப்பூசி போடாத 50 வயதுக்கு மேற்பட்ட பணியாளர்களுக்கு வேலை செய்ய தடை விதிக்கப்படும்.  இதனால், சம்பள பிடித்தம் செய்யப்படும்.  ரூ.1.19 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படவும் கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நடைமுறையானது இன்று முதல் அந்நாட்டில் அமலுக்கு வருகிறது.  இந்த பணி தடையால், 5 லட்சம் பேர் பாதிப்படைய கூடும் என கூறப்படுகிறது.