முதல் முறையாக 2022 ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவிருக்கும் மூன்று பெண்கள்

Prasu
2 years ago
முதல் முறையாக 2022 ஆஸ்கர் விருது வழங்கும்  நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவிருக்கும் மூன்று பெண்கள்

வரும் மார்ச் 27-ஆம் தேதி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்த விருது வழங்கும் விழாவை முன் எப்போதும் இல்லாத வகையில் முதல் முறையாக மூன்று பெண்கள் தொகுப்பாளர்களாக தொகுத்து வழங்க உள்ளனர். அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

1987-க்கு பிறகாக ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வை மூன்று பேர் ஒருங்கிணைந்து தொகுத்து வழங்க உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. வாண்டா சைக்ஸ், எமி ஷுமர் மற்றும் ரெஜினா ஹால் ஆகிய மூன்று பெண்கள்தான் இந்த விழாவினை தொகுத்து வழங்க உள்ளனர். 

இந்த முறை சிறந்த ஆவணப்படம் (Best Documentary Feature) பிரிவுக்கான பரிந்துரையில் இந்திய படைப்பான ‘ரைட்டிங் வீதி ஃபயர்’ இடம் பெற்றுள்ளது. 

சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை என 23 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட உள்ளன. அதிகபட்சமாக ‘தி பவர் ஆப் தி Dog’ திரைப்படம் 12 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.