க.பொ.த உயர்தர பரீட்சையில் குதிரையோட வந்த தேரர் போலி தேசிய அடையாள அட்டையுடன் கைது!

Mayoorikka
4 years ago
க.பொ.த உயர்தர பரீட்சையில் குதிரையோட வந்த தேரர் போலி தேசிய அடையாள அட்டையுடன் கைது!

ஆள்மாறாட்டம் செய்து க.பொ.த உயர்தர பரீட்சை எழுத வந்திருந்த தேரர் ஒருவர் போலி தேசிய அடையாள அட்டையுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் கொக்மாதுவ – வெலிகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தொியவருவதாவது,

புத்தளம் சாந்த மரியா தமிழ் வித்தியத்திலுள்ள பரீட்சை நிலையத்தில் நான்காவது நாளாக க.பொ.த. உளர் தரப் பரீட்சை சிங்கள பாடத்துக்கான 2ம் பிரிவு வினா தாளுக்க விடை எழுத குறித்த தேரர் வந்துள்ளார். 

இந்நிலையில் குறித்த தேரர் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகத்தில் அடிப்படையில் அவர் பரீட்சை நிலைய தலைவரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 

அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த தேரர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

மஹஹீல்ல இசுருபுர பொலிஹத்த பிரதேசத்திலுள்ள விகாரையின் தேரர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள தேரரை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதுடன் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4