விண்வெளியில் மத குருமார்களை பணியமர்த்தும் நாசா - ஆன்மீக அணுகுமுறையை கடைபிடிக்க நாசா விஞ்ஞானிகள் திட்டம்

Prasu
2 years ago
விண்வெளியில் மத குருமார்களை பணியமர்த்தும் நாசா - ஆன்மீக அணுகுமுறையை கடைபிடிக்க  நாசா விஞ்ஞானிகள் திட்டம்

விண்வெளியில் அறியப்படாத இடத்தில் இருந்து மின்காந்த அலைகளாக சமிக்ஞை வரும் போதெல்லாம், ஏலியன்கள், அதாவது வேற்று கிரக வாசிகள் குறித்து பேச்சு அடிபடும். இது குறித்து நெடுங்காலமாக அறிவியல் ரீதியில் நாசா ஆய்வு செய்து வருகிறது.

அதே சமயம் ஏலியன்கள் குறித்து ஒவ்வொரு மதத்திலும் ஒரு நம்பிக்கை ரீதியான கதையுண்டு. அதை வெறும் கட்டுக்கதையாக புறந்தள்ளாமல், தங்கள் ஆய்வுக்கு எந்த வகையிலாவது உதவுமா என்று நாசா விஞ்ஞானிகள் சிந்தித்துள்ளனர்.

அதன் முடிவாக உலகம் முழுவதிலும் இருந்து வெவ்வேறு மதங்களை சேர்ந்த 24 இறை நம்பிக்கையாளர்களை பணியமர்த்த நாசா திட்டமிட்டுள்ளது. அவர்கள் வேற்று கிரக வாசிகளிடம் எந்த வகையில் தொடர்பு கொள்கின்றனர், என்பதை நாசா விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.

இதனிடையில் தான் விண்வெளி குறித்து அரிய தகவல்களை அறிந்து கொள்ள உலகின் மிகப்பெரிய ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது. எப்படியோ விரைவில் விண்வெளி குறித்து பல தகவல்களை நாம் அறிந்து கொள்ள முடியும்.