வியாழன் கிழமை நீங்கள் வணங்கவேண்டிய தெய்வம் இவர்தான். வணங்கிப்பாருங்கள்.

Keerthi
2 years ago
வியாழன் கிழமை நீங்கள் வணங்கவேண்டிய தெய்வம் இவர்தான். வணங்கிப்பாருங்கள்.

தேவர்களுக்கெல்லாம் அதிபதியாக விளங்கக்கூடிய குரு பகவானை வணங்க கூடிய கிழமை வியாழக்கிழமை. 

வியாழக்கிழமையின் பிரகஸ்பதி என்று கூறப்படும் குரு பகவானை எவ்வாறு விரதமிருந்து வழிபாடு செய்ய வேண்டும் என்று பார்ப்போம். 

  • அதாவது அமாவாசை முடிந்து வளர்பிறையில் வரக்கூடிய வியாழக்கிழமையில் தொடங்கி தொடர்ந்து 16 வியாழக்கிழமை விரதம் இருந்து பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றி குருபகவானின் காயத்ரி மந்திரங்கள் சொல்லி இனிப்பு பதார்த்தங்களை வைத்து விரதங்களை கடைப்பிடிக்க வேண்டும். பின்பு சிவன் கோவிலுக்குச் சென்று நவகிரகதோடு இருக்கும் குருபகவானுக்கு கொண்டை கடலை மாலை சாத்தி வழிபாடு செய்வது நன்மையை பயக்கும். 
  • ஏதோ ஒரு காரணத்தால் நமக்கு அவப்பெயரை ஏற்படுதல், ஆன்மிகத்தில் நாட்டமின்மை, ஆரோக்கியத்தின் குறைபாடு  மற்றும் பொருளாதார வளர்ச்சியின்மை போன்ற குறைபாடு உள்ளவர்கள் 16 வியாழக்கிழமை விரதமிருந்து குரு பகவானை வழிபட்டு வந்தால் குறைபாடுகள் கலைந்து நல்லதொரு முன்னேற்றப் பாதையை அடையலாம். 
  • வியாழன் தோறும் மாலை வேளையில் நம் வீட்டிலேயே லட்சுமி குபேர பூஜை செய்து வந்தால் செல்வம் கொழிக்கும். 
  • அதேபோன்று ஞானத்தை போதிக்கும் மகான்களை (ஸ்ரீ சாய் பாபா, ஸ்ரீ ராகவேந்திரா) வணங்குவதற்கு ஏற்ற நாளாக வியாழக்கிழமை உள்ளது. 
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!