மத்துகம பெண்ணொருவர் சுட்டுக்கொலை: விசாரணைகளுக்காக 6 காவல்துறை குழுக்கள் நியமனம்

Prathees
4 years ago
மத்துகம பெண்ணொருவர் சுட்டுக்கொலை: விசாரணைகளுக்காக 6 காவல்துறை குழுக்கள் நியமனம்

களுத்துறை, மத்துகம பகுதியில் உள்ள வீடொன்றில், நேற்றிரவு பெண்ணொருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளுக்காக 6 காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

மூன்று பிள்ளைகளின் தாயான 40 வயதான ஒருவேர சம்பவத்தில் கொலைசெய்யப்பட்டிருந்தார்.

குறித்த பெண், தமது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் வீட்டில் இருந்த வேளையில், உந்துருளி ஒன்றில் பிரவேசித்த இருவர், வீட்டுக்குள் நுழைந்து துப்பாக்கி பிரயோகம் நடத்தி அவரைக் கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

பாதாள குழு உறுப்பினரான மத்துகம ஷான் என்பவரின் குழுவினரால் குறித்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகித்துள்ளனர்.

எனினும் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவர்கள் தொடர்பில் இதுவரையில் எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மத்துகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4