இலங்கையில் வேகமாகப் பரவும் நோய் அறிகுறிகள் அற்ற ஒமிக்ரான்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!

#SriLanka #Omicron
Nila
4 years ago
இலங்கையில்  வேகமாகப் பரவும் நோய் அறிகுறிகள் அற்ற ஒமிக்ரான்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!

எவ்வித நோய் அறிகுறிகளும் இல்லாத ஒமிக்ரான் நோயாளர்களிடமிருந்து பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.

இதனால் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஒமிக்ரான் பிறழ்விற்கான அறிகுறிகள் தென்படாத காரணத்தினால் அன்டிஜன் அல்லது பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளாத குறிப்பிட்ட சதவீத கொரோனா நோயாளர்கள் சமூகத்தில் இருப்பதால் மேலும் தொற்று பரவலாம் எனவும் எச்சரித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4