மாணவிகளின் கழிவறையில் அதிநவீன கமரா எப்படி வந்தது? 15 பேரிடம் வாக்குமூலம் பதிவு

Prathees
2 years ago
மாணவிகளின் கழிவறையில் அதிநவீன கமரா எப்படி வந்தது? 15 பேரிடம் வாக்குமூலம் பதிவு

கம்பஹா விஜயராம மாவத்தையில் உள்ள பெண்கள் ரியூசன் வகுப்பின் மலசலகூடத்தில் கையடக்கத் தொலைபேசி அல்லது கணனி மூலம் நேரடியாக மலசலகூடத்தில் நடப்பதை பார்க்கும் சாதனம் பொருத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கம்பஹா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த ரியூசன் வகுப்பில் க.பொ.த (உ/த) பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்

கழிவறையில் அதிநவீன கருவி பொருத்தப்பட்டிருப்பதை மாணவி ஒருவர் பார்த்துள்ளார்.

 இது தொடர்பில் கல்வி வகுப்பு ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பெற்றோருக்கு அறிவித்ததையடுத்து பெற்றோர்கள் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கம்பஹா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கழிவறையில் பொருத்தப்பட்டுள்ள நவீன தொழில்நுட்பத்தின் மூலம் கையடக்கத் தொலைபேசி அல்லது கணனி இயந்திரம் மூலம் கழிவறையில் என்ன நடக்கிறது என்பதை நேரடியாகப் பார்க்க முடியும் என கம்பஹா பொலிஸ் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பயிற்சி வகுப்பின் கட்டிட உரிமையாளர் உட்பட 15 பேரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பயிற்சி வகுப்புக்கு ஆஜராகும் மாணவர்கள் சாட்சியங்களை பதிவு செய்து வரும் நிலையில்இ சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்படவுள்ளதாக கம்பஹா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கம்பஹா பிரதேச பொலிஸ் அத்தியட்சகர் இந்திக்க டி சில்வா, பொலிஸ் அத்தியட்சகர்  துசித குமார மற்றும் கம்பஹா பொலிஸ் தலைமையக பொலிஸ் பரிசோதகர் சமன் ஜயசிங்க மற்றும் ஏனைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.