இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவுடன் முரண்பட்ட அமைச்சின் செயலாளர் பதவி நீக்கம்?

Prathees
2 years ago
இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவுடன் முரண்பட்ட அமைச்சின் செயலாளர் பதவி நீக்கம்?

கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ரஞ்சித் திஸாநாயக்க வேறு நிறுவனத்திற்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து அரசு உயர் அதிகாரிகள் அவரிடம் விசாரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் வேறொரு அரசாங்க அமைச்சு அல்லது வேறு அரச நிறுவனத்தில் உயர் பதவியில் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கிராமிய வீதிகள் மற்றும் எஞ்சிய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா, அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ரஞ்சித் திஸாநாயக்கவுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அமைச்சின் தனிப்பட்ட ஊழியர்களை அண்மையில் நீக்கினார்.

நேற்றும் அமைச்சின் ஊழியர்கள் அமைச்சில் இருக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.