சூழலுக்கு இணக்கமான உற்பத்திகளை லங்கா சதொசவில் விநியோகிக்க நடவடிக்கை

Mayoorikka
2 years ago
சூழலுக்கு இணக்கமான உற்பத்திகளை லங்கா சதொசவில் விநியோகிக்க நடவடிக்கை

சூழலுக்கு இணக்கமான உற்பத்திகளை லங்கா சதொச விற்பனை நிலையம் ஊடாக விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொலித்தீன், பிளாஸ்டிக் மற்றும் உணவு பொருட்கள் உள்ளடங்கிய உக்காத பொதிகள் ஆகியவற்றை தடை செய்வதற்கு சுற்றாடல் அமைச்சு அண்மையில் தீர்மானம் எடுத்தது.

அதற்கமைய சூழலுக்கு இணக்கமான உற்பத்திகளை மேம்படுத்துவதற்கு லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து சூழலுக்கு உகந்த உற்பத்திகளை சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக விநியோகிக்கும் வகையில் வர்த்தகத்துறை அமைச்சில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.