அனைத்துச் சேவைகளையும் தொழில்நுட்பத்தின் ஊடாக முன்னெடுக்க நடவடிக்கை

Mayoorikka
2 years ago
அனைத்துச் சேவைகளையும் தொழில்நுட்பத்தின் ஊடாக முன்னெடுக்க நடவடிக்கை

2022ஆம் ஆண்டு இறுதிக்குள், நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்கும் டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்குவதற்கான பின்புலம் அமைக்கப்படும் என்று, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று காலி தொழில்நுட்ப பூங்காவை பார்வையிட்டதன் பின்னர் அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கிராம சேவகர் உட்பட ஜனாதிபதியின் செயலாளர் வரையான அனைத்து அரச சேவைச் செயற்பாடுகளும் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் தொடர்புபடுத்தப்படும் என்றும் ஜனாதிபதி அவர்கள் வழங்கியுள்ள இலக்குகளைப் பூர்த்தி செய்து, எதிர்வரும் 30 மாதக் காலப்பகுதிக்குள் அனைத்துச் சேவைகளையும் இணையத் தொழில்நுட்பத்தின் ஊடாக முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.