புத்தளத்தில் முச்சக்கர வண்டி மீது மோதிய மோட்டார் சைக்கிள்: இருவர் படுகாயம்

Prathees
4 years ago
புத்தளத்தில் முச்சக்கர வண்டி மீது மோதிய மோட்டார் சைக்கிள்: இருவர் படுகாயம்

புத்தளம் தபால் நிலைய சுற்றுவட்டத்தில் இன்று (18) காலை முச்சக்கர வண்டி மீது மோட்டார் சைக்கிளொன்று மோதி  விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இதனால், குறித்த முச்சக்கர வண்டி வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த இருவர் காயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த புத்தளம் தலைமையக போக்குவரத்து பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர்.

அத்துடன், முச்சக்கர வண்டியின் முன்பகுதி முழுமையாக சேதமடைந்துள்ளதுடன்இ மோட்டார் சைக்கிளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் புத்தளம் தலைமையக போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4